க்னோ

மாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தேர்தலில் வாக்குகளைப் பெற பாஜக புல்வாமா தாக்குதலை நடத்தி 40 வீரர்களை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம்14 அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதை ஒட்டி பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன.

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ராம் கோபால் யாதவ், “தேர்தலில் வாக்குகளைப் பெற சிஆர்பிஎஃப் வீரர்கள் பாராமிலிட்டரி வீரர்கள் கொல்லப்பட்டதால் பாரா மிலிட்டரி வீரர்க அரசின் மீது மிகவும் அதிருப்தியில் உள்ளனர். ஜவான்கள் சென்ற ஜம்மு- காஷ்மீர் நெடுஞ்சாலையில் எவ்வித பாதுகாப்பு சோதனையும் நடைபெற விலை. அவர்கள் சாதாரண பேருந்துகளில் அனுப்பப் பட்டுள்ளனர்.

இதில் மாபெரும் சதி வேலை நடந்துள்ளது. இது குறித்து நான் மேலே ஏதும் கூற விரும்பவில்லை. புதிய அரசு அமைந்ததும் இது குறித்து நாங்கள் விசாரணை நடத்த உள்ளோம். அப்போது இதில் தொடர்புடைய பல பெரிய புள்ளிகளின் பெயர்கள் தெரிய வரும்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “ராம் கோபால் யாதவ் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவ்ர் சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். இவ்வாறு வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திய ராம் கோபா யாதவ் தனது கருத்துக்களுக்காக மக்களிடன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளர்.