சென்னை:

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன்  கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பதவிவகித்து வந்த கராத்தே தியாகராஜன், கட்சி விரோத    நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்துய கூட்டணிக்கு கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.