டில்லி,

ல்லிக்கட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான  அபிஷேக் சிங்வி பீட்டா சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார்.

தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.

இதற்கு பீட்டா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர  சட்டத்துக்கு எதிராக பீட்டா வழக்கறிஞராக காங்கிரஸ் கட்சியின் செய்த் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராக உள்ளார்.

 

ஜல்லிக்கட்டு குறித்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமையன்று விசாரிக்க உள்ளது.

பீட்டா சார்பில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி ஆகராக இருப்பது தமிழக மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக ஆஜராக உள்ளார். இதற்கு தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பீட்டா அமைப்பு மீண்டும் தமிழக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விஷயத்தில் மூக்கை நுழைத்திருப்பது தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மீண்டும் கோபத்தை கிளறி உள்ளது.