புதுடெல்லி:
சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அம்லாகக் துறையை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவது என்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 18 ஆம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தும் வாய்ப்பைப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.