டெல்லி
இந்திய பாக் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடிஏன் மறுக்கவில்லை என காங்கிரஸ் வினா எழுப்பியுள்ளது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான சந்திப்பின் போது ஓவல் அலுவலகத்தில் பேசிய ட்ரம்ப்,
“இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையை நாங்கள்தான் தீர்த்து வைத்தோம். வர்த்தகம் மூலம் நான் தான் அதனை தீர்த்து வைத்தேன். பாகிஸ்தானிலும் சிறந்த மனிதர்கள், நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் நல்ல நண்பர்கள் மற்றும் மனிதர்கள் இருக்கிறார்கள்”
என தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா எக்ஸ் தளத்தில்,
“அதிபர் டிரம்ப் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக கூறுவது இது எட்டாவது முறையாகும். ஆபரேஷன் சிந்தூரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார். பிரதமர் மோடி இந்தக் கூற்றை ஒரு முறை கூட நிராகரிக்கவில்லை. இந்த மௌனத்தின் அர்த்தம் என்ன?”
என கேள்வி எழுப்பியுள்ளார்.
Trump, Indo pak cease fire, Modi silent , Congress questiooned,