டெல்லி

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து பொதுக்கூட்டம் நடத்தவுள்ளது.

நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அந்த பேட்டியின் போது அவர்கள்,

“இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார்.

எனவே, அவரது மவுனம் குறித்து கேள்வி எழுப்புவதற்காக நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 16-ந் தேதி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்”

என்று தெரிவித்துள்ளனர்.