டெல்லி:

சாரா பண்டிகையின் இறுதிநாளான இன்று நாடு முழுவதும் ராவண வதம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் மோடி பங்குகொண்டு ராவணன் பொம்மைக்கு அம்பு எய்தி தீ வைத்தார்.

அதுபோல, நவ்ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி (Nav Shri Dharmik Lila Committee)  ஏற்பாடு செய்திருந்த தசரா விழாவில்,  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி  ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா மற்றும் மன்மோகன் சிங், அங்கு ராமர் லட்சுமணன் வேடமிட்ட வர்களுக்கு திலகம் வைத்து வணங்கினர். அதைத்தொடர்ந்து வில்லை கையில் ஏந்தி ராவணன் சிலையை நோக்கி எய்து தீ வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், இந்து அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மற்றொரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டில்லி முதல்வரம், ஆம்ஆத்மி கட்சித் தலைவரு மான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு சிறப்பித்தார்.