சென்னை:

மிழக சட்டப்பேரவையில் இன்று  மேகதாது அணை குறித்து பதில் அளிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள்  சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 1ந்தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார்.  அதை தமிழ்நாட்டில் இருக்கும் திமுக, காங்கிரஸ் ஏன் எதிர்த்துக் குரல் கொடுக்க வில்லை? நான் திரும்பத் திரும்ப இதைச் சொல்லிவருகிறேன். ஆனால் உங்களிடம் இருந்து பதில் இல்லை” என்று கேள்வி எழுபபி இருந்தார்.

இதற்கு  இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று, பதில் அளிக்கப்போவதாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி  சபாநாயகரிடம் அனுமதி கோரினார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுக்கவே, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.