டில்லி:

க்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவருக்கு சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையின் தற்காலிக இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் நேற்று முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நேற்று பிரதமர் மோடி உள்பட மூத்த உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில் மீதமிருந்த உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர்.

இரண்டாம் நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதுபோல காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர், முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக மூத்தத் தலைவர் சாக்ஷி மகராஜ், ஹேமமாலினி உள்பட பலர்  மக்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பி.க்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.