டெல்லி:

காராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் அமைச்சர் பதவி பெற்றுள்ள  காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் அமைச்சர்களுடன் ராகுல்காந்தி மற்றும் தலைவர்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனா இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து. மாநில முதல்வராக  உத்தவ் தாக்கரே கடந்த நவம்பர் 28ந்தேதி பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த  6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.  அதன்படி, துணைமுதல்வர், கேபினட் மற்றும் துணை மந்திரிகள் என மொத்தம் 36 பேர் பதவியேற்றனர். இவர்களில்  சிவசேனா கட்சிக்கு 13 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 13 பேரும், காஙகிரஸ் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் அசோக் சவான், யஷோமதி தாக்கூர், விஜய் வட்டேடிவார், கே.சி.படவாய், அமித் தேஷ்முக், வர்ஷா கெய்க்வாட், அஸ்லாம் செக், சுனில் காதர் உள்பட 10 பேரும்  அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து மாநில அமைச்சரவையின் மொத்தம் 42ஆக அதிகரித்து உள்ளது.

‘இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு வரவழைத்தது. அதன்படி, டெல்லி சென்றுள்ள மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் ராகுல்காந்தியின் இல்லத்தில் அவரை  சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்வின்போது, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணு கோபால் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள், கலந்து கொண்டனர்.