டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தொடங்கியது.

ஏற்கனவே அறிவித்தபடி,  காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்ட உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட 52 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உடல்நலப் பாதிப்பு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திக் விஜய்சிங் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.