குஜராத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

Must read

குஜராத்:
பாரதிய ஜனதா கட்சி அடுத்த மாதம் 3-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக லிம்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னாள் அமைச்சர் கிரிட்சின் ராணாவை தனது வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சேதன் கஹாசரை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். சேதன் கச்சார் சுரேந்திர நகர் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை முன்னாள் அமைச்சரான கிரிட்சின் ராணாவை வேட்பாளராக அறிவித்தது. கிரிட்சின் ராணாவை தவிர மேலும் 5 பேரை பாஜக தேர்தலில் களமிறக்கி உள்ளது, இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் சளைக்காமல் மேலும் 6 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

More articles

Latest article