சென்னை:
ரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அவருடைய மகன் ஈவேரா திருமகன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.