புதுடெல்லி:
கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பேரணிகள் மற்றும் பெரிய பொதுக் கூட்டங்களை உள்ளடக்கிய பிற பெரிய நிகழ்வுகளை “தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் அதிவேகமாக அதிகரித்து வரும் நேரத்தில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பெரிய கூட்டங்களுடன் பொது பேரணிகளை நடத்தியதற்காக அரசியல் கட்சிகள் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.