டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று விவாதிக்க வலியுறுத்தி  காங்கிரஸ் சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக இந்திய மத்திய அரசு இவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, அவர்களின் மெசேஜ்களை படிப்பது உள்ளிட்ட உளவு பணிகளை மேற்கொண்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 40 செய்தியாளர்கள், ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் வெளியிட்டுள்ள “பெகாசஸ் புராஜக்ட்” என்ற விசாரணை கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள்  கூட்டமான நேற்று பாராளுமத்தில் அமளி நிலவியது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் சர்ச்சை குறித்து விளக்கம் அளித் மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்பு களுக்கு, வேவு பணிகளுக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவின் சட்டம் இதற்கு அனுமதிக்காது. இந்தியாவின் சட்டமே மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எதற்கும் ஆதாரம் இல்லை என்றார். ஆனால், அதை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று  பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று விவாதிக்க வலியுறுத்தி  காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம்தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார். இந்த மீதான இன்று காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.