சென்னை:
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் என்றும், வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில் தான் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.