சென்னை: 100 யூனிட் இலவச மின்சார திட்டம் பற்றிய கட்டண  குழப்பங்கங்கள் மக்களிடையே இருக்கும்  நிலையில், புதிதாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது,  எந்த தேதியில் இருந்து,  அமலுக்கு வருகிறது என தெரியாத குழப்பமும் இப்போது சேர்ந்திருக்கிறது.
கடந்த மே மாதம் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற  ஜெயலலிதா, முதல் உத்தரவாக மின் கட்டண சலுகைக்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.   அன்று முதலே இத் திட்டம் அமலுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
download (1)
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கான மின் கட்டண கணக்கீடு கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் நடந்து வருகிறது. இதில் பழைய கட்டணமே வந்துள்ளது. அதாவது, “பயன்படுத்திய யூனிட்டுக்கு முழுமையாக கட்ட வேண்டும். 100 யூனிட் இலவச கணக்கு இப்போது கிடையாது” என்று மின் வாரிய ஊழியர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், “புதிய நடை முறைக்கு ஏற்ப பிரத்யேக சாப்ட்வேர் இன்னும் வரவில்லை. அது வந்தால் தான் புதிய தி்ட்டத்தின்படி மின் கணக்கீட்டு முறை அமலுக்கு வரும். ஜூன் 7ம் தேதிக்கு முன்பே கணக்கெடுத்தவர்களுக்கு கட்டணத்தில் சலுகை கிடையாது. அதன் பிறகு கணக்கெடுத்தவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளது”  என்று கூறுகிறார்கள்.
இந்த குளறுபடி குறித்து தமிழக மின்வாரியம் வெளிப்படையாக அறிவித்தால், குழப்பம் தீரும்.