மிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு 2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் கீழ் தேர்வு செய்யப்படவுள்ளன.
இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
போட்டியில் மொத்தம் 33 பிரிவுகளின் பரிசு அளிக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்படும்.
1402929645-8667
இணையதளத்திலிருந்து… பரிசுப் போட்டிக்கு உரிய விண்ணப்பம், விதிமுறைகளை
www.thamilvalarchithurai.org  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் பெறுவதற்கு 23 – 10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல் வில்லையை ஒட்டி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூல் பிரதிகள் , போட்டிக் கட்டணம் ரூ.100 வங்கி கேட்புக் காசோலையாக எடுத்து  “”தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை” என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்த வேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.