கணவருடன் தகராறு: நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை!

Must read

வேலூர்:

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி  அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்றம்பள்ளி அருகே உள்ளது வெலக்கல்நத்தம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் அமாவாசை என்பவரின் மகள் தமிழரசி. இவருக்கும், நாட்றம்பள்ளி அடுத்த  அக்ராகரம் ஆச்சாரி  வட்டத்தை சேர்ந்த வஜ்ஜிரம் மகன் சிங்காரவேல்  என்பவருக்கும் கடந்த 2012-ம்வருடம் திருமணம் நடைபெற்றது.  சிங்கார வேல் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதிகளுடன் சிங்காரவேலின் குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில், மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவத்தன்று மாமியார் மருகள்  இடையே தகராறு ஏற்பட்டதால், சிங்காரவேல் தமிழரசி வீட்டுக்கு தகவல் சொல்லி இரண்டு நாள் உங்கள் வீட்டுக்கு அழைத்து வருவதாக கூறி, தமிழரசியை அவரது அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனார்.

இன்று, தமிழரசின் தாயார், வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த தமிழரசி, கணவர் சிங்கவேலுவுடன்  ஃபோனில் பேசியுள்ளார்.  அப்பொழுது  கணவர் மனைவி இருக்கும் இடையே   ஃபோனில் வாக்கு வாதம் ஏற்ப்பட்டு உள்ளது.

அதையடுத்து, மனமுடைந்து போன,  தமிழரசி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தமிழரசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழரசியின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை செய்துகொண்ட தமிழரசிக்கு, . 4வயதில் ஒரு ஆண் குழந்தையும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article