சென்னை: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு 1 லட்சம் நிதி உதவி, புதிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை உள்பட பல சலுகைகள் அறித்தார். இதையடுத்து அவருக்கு  தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி  ஏற்பட்ட பின், நடைபெற்ற முதன்முதலாக வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்ததற் காகவும், நம்மாழ்வார் பெயரில் சிறப்பு மையம் அமைப்பு உள்பட ஏராளமான அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

திமுக அரசின் அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்,  தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது,  பாரம்பரிய நெல் வகைகளால் அலங்கரிக்கப்பட்ட நெல் கதிர் கொத்தை வழங்கினர்.

மேலும் நம்மாழ்வார் பெயரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அனைத்து வகை விவசாயிகளுக்கும் விலையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் விவசாயிகள் சங்கத்தினர் முன்வைத்தனர்.