‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பிற்கு விடைகொடுத்தார் கதிர்…!

Must read

‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பிற்கு விடைகொடுத்தார் கதிர்

´பரியேறும் பெருமாள்´ படத்துக்கு பிறகு கதிர், விஜய்யுடன் இணைந்து ´பிகில்´ படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது .

இந்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ´மேயாத மான்´ இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் மனது பேச விரும்புவதை இந்த புகைப்படம் பேசும். ´பிகில்´ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார் .

More articles

Latest article