சென்னை

ணையச் செயலி டிக்டாக் மூலம் புகழ்பெற்ற ரவுடி பேபி உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசுவதாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டின் புகழ்பெற்ற செயலியான டிக்டாக் மூலம் தமிழகத்தில் ப்லர் பிரபலம் ஆனார்கள்.  அவர்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி பி முத்து, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.   இவர்களில் சிலர் திரைப்பட வாய்ப்பும் இந்த செயலி மூலம் பெற்றுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு மத்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்தது.  இதையொட்டி இந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்து இந்த தடையை நீக்க வேண்டுகோள் விடுத்தனர்.  இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.  ஆகவே இவர்கள் தங்களுக்கு எனத் தனி யு டியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றில் இவர்கள் ஒருவரை ஒருவர் ஆபாசமாக விமர்ண்டிப்பதாகவும் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் பேசி வருகின்றனர்.  ஒருசிலர் இந்த டிக்டாக் புகழைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வந்து பாலியல் தொழில் செய்ய மாதம் ஊதியம்  எவ்வளவு வேண்டும் எனக் கேட்டது சர்ச்சையை உண்டாக்கியது.

எனவே இது போன்ற ஆபாச வீடியோக்களால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்லக் கூடும் எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இந்த புகார்களை, எல்லை பாதுகாப்புப் படை வீரர் காளிராஜ், தமிழக காங்கிரஸின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் புனிதவள்ளி, சமுக ஆர்வலர் சுமித்ரா உள்ளிடோர் தமிழக டிஜிபி அலுவலகத்தில் நேற்று நேரில் அளித்துள்ளனர்.

இந்த புகாரில், ”சமூக வலைத்தளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி, ஜி.பி.முத்து, இலக்கியா உள்ளிட்டோர் ஆபாசமாகப் பேசியும், நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அவர்கள் பேசும் ஆபாச பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்கள் பயன்படுத்தும் யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.