சென்னை: ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வெருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிரபல கட்டுமான நிறுவனம் ஆதித்யராஜ் உள்பட  அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங் களுக்கு சொந்தமான நாடு முழுவதும் சுமார்  60இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சென்னையில் அண்ணாநகர்,மணலி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 6மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆதித்யராம் குழுமம் ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மூன்று தென்னிந்திய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆதித்யராம் குழும நிறுவனங்களில் ஆதித்யராம் பிராப்பர்டீஸ் (பி) லிமிடெட், ஆதித்யராம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட், ஆதித்யராம் மூவீஸ், ஆதித்யராம் ஹவுசிங் (பி) லிமிடெட், ஆதித்யராம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி, மற்றும் ஆதித்யராம் கன்வென்ஷன் அண்ட் ரிசார்ட்ஸ் என பல நிறுவனங்ஙகள் உள்ளருது குறிப்பிடத்தக்கது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது.

 ஆதித்யராம் குழுமம்  நிறுவனர் மற்றும் CMD ஆதித்யராம் என்பது குறிப்பிடத்தக்கது.