சென்னை:

மிழ் மொழியுடன்  ஒப்பிடும்போது, ​​இந்தி மொழி கோமணம் (டயாப்பர்)  அணியும் குழந்தையைப்  போன்றது என  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இந்தி மொழி குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய நடிகர் கமல்ஹாசன்  இந்தி ஒரு நல்ல மொழி, ஆனால் அதை திணிக்கக்கூடாது என்று கூறியவர்,  தமிழுடன் இந்தியை ஒப்பிடும்போது, அது குழந்தைக்கு அணிவிக்கப்படும் டயாப்பர் போன்றது என தெரிவித்தார்.

“நான் இந்தியை கேலிக்கூத்தாக கருதவில்லை, அதன் மீது இரக்கமும் கருணையும் கொண்டிருக்கிறேன். அதை எங்கள் தொண்டையில் திணிக்காதீர்கள் என்றார்.

மேலும், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளின் தமிழின் இளைய மொழியாகும் என்று தெரிவித்தவர், தமிழ், சமஸ்கிருதம் போன்ற பழைய மொழிகளுடன் ஒப்பிடும்போது இந்தி மொழியை “டயப்பர் அணியும் சிறு குழந்தை” என்றும்  அந்த மொழியை நாங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும், ஏனென்றால் அது எங்கள் குழந்தையும் கூட. நாங்கள் அதை நிச்சயமாக கவனித்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.