சென்னை:

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா,  துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏற்கனவே பல பதக்கங்களை அள்ளிய நிலையில், மற்றொரு போட்டியில்  இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற  பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தேஜாஸ்வனி சவந்த், அன்சும் மவுட்கில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில் 618.9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். சிங்கப்பூர் வீராங்கனை மார்டினா லின்ட்செ வெலோசோ 621 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை 618.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலம் பெற்றார்.