கோல்டுகோஸ்ட் :

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் தங்கப்பதக்கம் கிடைக்க வாய்புள்ளது.

இன்று 6வது நாளாக போட்டி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியில்  இந்திய வீரர்கள் காலிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவுக்குமேலும்  பதக்கங்கள் கிடைப்பது  உறுதியாகி உள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை  ஹீனா சிந்து தங்கம் வென்றுள்ளார். ஏற்கனவே தங்கள் உள்பட 3 பதக்கங்களை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வென்றுள்ளது.

இந்நிலையில், குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ எடை பிரிவில் முகமது ஹுசாமுதீன் மற்றும் 69 கிலோ எடை பிரிவில் மனோஜ் ஆகியோர் ஆகியோர் காலிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளனர்.

அதுபோல 6-49 எடை பிரிவில், இந்திய வீரர் அமித் பங்கள், 91கிலோ எடை பிரிவில் நமன் தன்வார் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இந்தியா தற்போது 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.