சென்னை:

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சியினரின் கோரிக்கையையும் மீறி ஐபிஎல் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

தற்போது 4000 போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற் குள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது, செல்போன், காமிரா என எதுவும் கொண்டு வரக்கூடாது  என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்றைய போட்டியைகாண  ரசிகர்கள் மைதானத்திற்குள்  செல்போன் எடுத்து வர சி.எஸ்.கே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக டுவிட் செய்துள்ளார்.

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் ரசிகர்கள் செல்போன் எடுத்து வர சி.எஸ்.கே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி போராட்டங்களால் செல்போன் எடுத்து வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.