சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதவி பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
அப்போது, சென்னை பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் மாறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் மாறியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்றைய தமிழ் தேர்வுக்கு கடந்த ஆண்டு வினாத்தாள் வழங்கப்பட்டதால் தேர்வு நிறுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
[youtube-feed feed=1]பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது!