அரை குறை ஆடையுடன் இணையதளத்தை அனல் பறக்க வைப்பதில் பெயர் போனவர் கொலம்பியா-வைச் சேர்ந்த விவியன் பொலனியா.

34 வயதான விவியன் பொலனியா, ககுடா முதன்மை நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக உள்ளார்.

விவியன் பொலனியா

கடந்த வாரம் ககுடா முதன்மை நீதிமன்றத்தில் ஆன்லைனில் வழக்கு ஒன்றை விசாரித்த குற்றவியல் நீதிபதி பொலனியா சிகரெட் பிடித்தபடி விசாரணை நடத்தினார்.

பின்னர் தன்னிலை மறந்த நிலையில் அரை நிர்வாணமாக ஒய்யாரமாக படுக்கையில் சாய்ந்து கொண்டு விசாரணை நடத்திய அவரிடம் வழக்கறிஞர் ஒருவர் உங்கள் கேமரா ஆன் செய்திருப்பதாக கூறியதை அடுத்து அதனை நிறுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.

இதில் நீதிமன்றத்தில் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்படவில்லை என்றும் கண்ணியமற்ற வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து அவரை மூன்று மாதம் சம்பளமில்லாமல் விடுப்பில் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் விசாரணைக்கு ஆஜராகும் நீதிபதி உள்ளிட்ட அனைவரின் கேமராவும் ஆன் செய்யவேண்டும் என்ற உத்தரவு இருந்தும் பலர் தங்கள் கேமராவை ஆப் செய்து வைத்திருந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.