சென்னை,

ல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் உடடினயாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மாணவிகளின் பெற்றோர் உடடினயாக கல்லூரியை முற்றுகையிட்டனர்.

சென்னை மவுன்ட்ரோட்டில் உள்ள  காயிதே மில்லத் பெண்கள்  கல்லூரி. இங்கு வெளி மாவட்ட மாணவிகள் தங்கியிருந்து படிப்பதற்காக விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  நேற்று இரவு உணவு சாப்பிட்ட விடுதி மாணவிகள்   பலருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக விடுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை விடுதி நிர்வாகம், உடனடியாக  அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் 64 பேர் தவிர மீதமுள்ளோர் முதல்உதவி சிகிச்சை பெற்று இரவே விடுதிக்‌கு திரும்பினர்.

இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரத்குறைவு காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக வும், சமைக்கப்பட்ட உணவில் பல்லி போன்ற விஷ ஐந்துக்கள் ஏதும் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று இரவு சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் உடடினயாக கல்லூரியை நோக்கி படையெடுத்தனர். இதன் கதாரணமாக கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதையடுத்து, கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விப்பட்டுள்ளது.

மாணவிகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பழைய நிலைக்கு திரும்ப ஏதுவாக ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.