பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனது உதடுகளைக் கொண்டு 3000 முத்தங்கள் பதிவு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படத்தை வரைந்துள்ளார். மாணவரின் வித்தியாசனமான திறமைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ஆர்கிடெக்சர் படித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் தன்னுடைய கலைத் திறனால், தஞ்சை பெரிய கோயில், அப்துல் கலாம் என பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். இவரது ஓவியம் கைகளறால் வரைவது மட்டுமின்றி, உதடு, மூக்கு போன்ற அங்கங்களைக்கொண்டு வரைவதில் கில்லாடி. இதுபோன்று ஏராளான ஓவியங்கள் வரைந்துள்ளார்.,

தற்போது, அவர், தனத உதடுகளைக்கொண்டு முதல்வர் ஸ்டாலினின் வண்ண ஓவியம் வரைந்துள்ளார். சுமார் 3000 முத்தங்களால் வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே முதல்வரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இவர் படம் வரைவதற்க பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால், தனது உதடுகளை அதில் பதித்து, அதை  வெள்ளைத் துணியில்  ஓவியமாக தீட்டி உள்ளார். இந்த ஓவியமானது 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்டது. . தனது வித்தியாசமான முயற்சியால் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓவியத்தை வரைந்த நரசிம்மனுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது.

உதடுகளை பதிந்து வரைந்த இந்த ஓவியத்தை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு வீடியோவாக அனுப்பவும் நரசிம்மன் திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]