விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த  பேருந்தை இயக்கி  டிரைவர் கண்டக்டர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அருகிலுள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3வது ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  இவர் நேற்று மாலை சென்னையில் இருந்து விழுப்புரம் வந்த நிலையில், சொந்த ஊராக கொததமங்கலம் செல்ல விழுப்புரத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஏறினார். அந்த பேருந்து பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்ற போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார். அப்போது இரவு 7 மணி அளவில் அவர் அருகே வந்த நடத்துனர்  மாணவியின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை கடுமையாக கண்டித்த அந்த மாணவி, போனை ஆன் செய்து தனது கணவரை அழைத்துள்ளார். அப்போது அவருக்கும், கண்டக்டர் மற்றும் டிரைவருக்கும் இடைய ஏற்பட்ட வாக்குவாதம் அவரது கணவரின் காதுக்கும் எட்டியது. இதற்கிடையில், மாணவியை அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கி சென்றுள்ளார். இதனால், ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்தார். இதை அவரது  கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தை விரட்டிச்சென்று  மடக்கி,  ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பிடித்து சரியாக கவனித்து, அவர்களை அருகே இருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உறுதி செய்யப்பட்டது. இதைடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓடும் அரசு பேருந்தில்  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.