சென்னை:  ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சிபிஎஸ்சி மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ந்தேதிக்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  இதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள் நடைபெறாமல் உள்ளது. ஆனால் சில தனியார் கல்லூரிகள் ஏற்கனவே மாணவர் சேர்க்கையை தொடங்கி நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று  துறைசார்ந்த அதிகாரிகளுடன்  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள், ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடப்பட இருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்திலும் மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அவ தெரிவித்தவர்,  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்முடி எச்சரித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும்.  பிளஸ் 2 மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியானவுடன், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.