செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுரை…

Must read

டெல்லி

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரித்  தேர்வுகளை ஜூலையில் நடத்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்கலை மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடந்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஒப்புதலோடு அடுத்த கல்வியாண்டிற்கான வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

அதில் கல்லூரித் திறப்பு, தேர்வுகள் உள்ளிட்ட நெறிமுறைகள் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகளைத் திறக்கவும், செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில்  கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கலாம்.

கல்லூரியில் COVID-19 cell உருவாக்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

PhD, MPhil மாணவர்களுக்கு பொது வாய்மொழித் தேர்வினை ஸ்கைப் , வீடியோ கான்பிரன்சிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியோடு நடத்தலாம்.

கொரோனாத் தொற்றின் பாதிப்பை பொறுத்து இதில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் யுஜிசி கூறியுள்ளது.

 

More articles

Latest article