கோவை:

கோவையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில், பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளின் நலன் கருகி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,  பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம், பேருந்தின்  நடத்துனர் பேருந்தை சுத்தமைக வைக்கவும், பயணம் இனிதாக அமையவும் வேண்டுகோளும் வாழ்த்தும் தெரிவிக்கிறார்.

நடத்துனர் பஸ்சின் முன்பகுதியில் நின்றுகொண்டு பயணிகளிடம்  பேருந்துகளில் தேவையற்ற பேப்பர்கள் ஏதும் போடாதீர்கள்… அதை வெளியே போட்டுவிட்டால் பேருந்து சுத்தமாக இருக்கும்.

வாமிட் வருவதுபோல யாருக்காவது தொந்தரவு இருந்தால் சொல்லுங்கள்.. நான் கேரி பேக் தருகிறேன்.. அதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்… புளிப்பு மிட்டாய் தருகிறேன் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றவர் பயண கட்டணத்தை தெரிந்துகொள்ளலாம் என்று கூறி கோவையில் இருந்து செல்லும் பேருந்து செல்லும் ஊர்களுக்கான பயண கட்டண விவரத்தை தெரிவிக்கிறார்.

முடிந்த அளவுக்கு சில்லரை கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கைகூப்பி வேண்டுகோள் விடுக்கிறார்…

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு பயணம் செய்வீர்கள்… உங்களது பயணம் பயனுள்ளதாகவும், இனிதாகவும், வெற்றிகரமாகவும் அமைய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்… நன்றி வணக்கம் என்று கைகூப்பி கும்பிட்டு நன்றிதெரிவிக்கிறார்..

பேருந்து நடத்துனரின் இந்த எளிமையான வேண்டுகோள் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

இதுபோல ஒவ்வொரு அரசு பேருந்து நடத்துனர்களும் செயல்பட்டால் பயணிகளும் அரசு பேருந்தை நாடி வருவார்கள்… தமிழக அரசு பேருந்தும் நஷ்டத்தில் இயங்குவதை தடுத்து லாபத்தில் இயங்கத் தொடங்கும்….

அந்த வீடியோவை நீங்களும் காணுங்களேன்….