கோவை 6வயது சிறுமி பாலியல் கொலை: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி கைது

Must read

கோவை:

கோவையில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடைபெற்ற விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த வாரம் கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற நிலையில், மாயமானார்.

அவரது உடல் அடுத்த நாள் காலை அந்த பகுதியில் உள்ள ஒரு முட்டுச்சந்தில் ரத்தக்காயங்களு டன்  கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

குழந்தையின், உடற்கூறு பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்படுட கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தனிப்படையின் தேடுதல் வேட்டையில் இன்று குற்றவாளி சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய விசாரணையின்போது,  சிறுமியை வன்கொடுமை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article