சென்னை:மேலாண்மை படிப்புக்கான சிமே தேர்வு ஜனவரி 25ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான  அனுமதிச்சீட்டு (Hall ticket) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்டில் உள்ள மத்திய உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர ‘சிமேட்’ எனும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வில் கட்டாயம் தோ்ச்சிபெற வேண்டும் அதன்படி,  எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளுக்கும் அது சார்ந்த துணைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வாக ‘மேட்’ எனப்படும் மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு (Management Aptitude Test – MAT) தேர்வை 2021 வரை அகில இந்திய மேலாண்மை சங்கம் (All India Management Association)  நடத்தி வந்தது. தற்போது இந்த தேர்வை  என்டிஏ (தேசிய தேர்வு முகமை) நடத்தி வருகிறது

இத்தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசினஸ் ஸ்கூல் எனப்படும் தலைசிறந்த 600 கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். காகித வழியிலும் கணினி வழியிலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த சிமேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 2024ம் ஆண்டு  டிசம்பரில் நடைபெற்றது. நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த நிலையில், தோ்வெழுத தகுதி பெற்றவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை,  https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். தோ்வுக்கான பாடத்திட்டம் உள்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.