சாகா

ப்பான் நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஒசாகா கோட்டையை முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள, கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மு க ஸ்டாலின் அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டைக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அவர் ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியின் அழைப்பை ஏற்றுப் பார்வையிட்டார்.