சென்னை

ப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1238 கோடி முதலீட்டுடன் நேற்று திரும்பி வந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. தமிழக அரசு இதற்கான ஆயத்த பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கி உள்ளது.

சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 23ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். இரு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 2024ம் ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தார். கடந்த மே 24 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார்.

முதலீட்டாளர்களை வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி முதல்வர் நேரில் அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 25ம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்றார்.

அங்கு டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கத்தின் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தபோது 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ. 819 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர் முன்னிலையில் கையெழுத்தாகின. ரூ. 128 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 9 நாள் வெளிநாட்டு பயணம் நேற்று காலையுடன் நிறைவடைந்தது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டுஇரவு 10.15 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.