திருச்சி
இன்று திருச்சியில் உள்ள கலைஞர் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்ம்m திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்ததுடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,
“இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர். திமுக ஆட்சியில் இவ்வளவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை எண்ணி வியப்பாக உள்ளது. அடுத்து வரும் திமுக ஆட்சியிலும் நமது ஆட்சியின் சாதனைகளை நாமே முறியடிப்போம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிமுகவின் இருண்ட ஆட்சியில் இருந்து மீட்டு திமுக விடியல் ஆட்சி நடத்தி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியின் 2.0 தொடரும் அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இனி நாம் போகும் பாதை சிங்கப்பாதை. அது ராக்கெட் வேகத்தில் இருக்கும். ”
என உறையாற்றி உள்ளார்.