காரைக்குடி:  சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின்  4கி.மீ தூரம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அதைத்தொடர்ந்து, இலங்கை தமிழர் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு பணி செய்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று காரைக்குடி அழக்கா பல்கலைக்கழகத்தில் நூலகம் திறப்பு மற்றும் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க கவுரவித்தார். தொடர்ந்து ஏராளமான மக்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் பயனர்களுக்கு நலத்ததிட்ட உதவிகளை வழங்கியதுடன், மருது சகோதர்களுக்கு சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, அரசு ஆதிதிராவிடர் மாணவியர் நல விடுதியில் ஆய்வு செய்தவர், அங்கு தங்கியுள்ள மாணவிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட இருந்த  உணவை ருசி பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும்,   தி.மு.க., கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தனியார் திருமண மண்டபத்திற்கு கிளம்பினார். அப்போது, அழகப்பா பல்கலை வாயிலில் இருந்து கல்லூரிச் சாலை, தேவர் சிலை வழியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் தனியார் மஹால் வரை 4 கி. மீ., தூரம் நடந்து சென்றார். அவரை வரவேற்று சாலையின் இருமங்கலும் திமுகவினர் கட்சி கொடியுடன் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது, வழியில் நின்றிருந்த மக்களுடன் கைகுலுக்கிய அவர், அவர்கள் அளித்த பூங்கொத்துகளையும் பெற்றுக் கொண்டார். சிலர் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், இன்று காலை   சாலையிலும் சாலையில் வாக்கிங் சென்ற முதல்வர் அப்போதும்,   மக்களை சந்தித்தார்.   தொடர்ந்து,  சிவகங்கை ஒக்கூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இலங்கை தமிழர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.