சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்னனர்.
கடந்த 10 மாதங்களில் ரூ.10 ஆயிரம் உயர்ந்து, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் சரவன் தங்கம் விலை ரூ.50ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ரூ.60ஆயிரத்தை கடந்துள்ளது.
தங்கத்திற்கும், தங்கத்தினால் செய்யப்பட்ட அணிகளன்களுக்கும் இந்திய மக்களிடையே தனி மரியாதை உண்டு. பல நூற்றாண்டுகளாக, இந்திய பெண்களின் வளர்ச்சியில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கம், அதனால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவது மூலம் சமூதாயத்தில் தங்களை உயர்ந்தவர்களாகவும் பெண் காட்டிக்கொள்கின்றனர். தங்க நகைகள் மீதான பெண்களின் அதீத ஆசை காரணமாகவும், உலகம் முழுவதும் சேமிப்புக்காகவும் தங்கம் அதிக அளவில் விற்பனையாகிறது. அதன் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கடந்த 2024 தொடக்கம் முதலே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 2024 பிப்ரவரி மாத இறுதியில், கிராம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயரத் தொடங்கியது. கடந்த நிதியாண்டான 2024ம் ஆண்டு கடந்த மார்ச் முதல் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. மார்ச் ஒன்றாம் தேதி ஒரு சவரன் ரூ. 46,520க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்தின் விலை சிறுக சிறுக உயர்ந்து வருகிறது. புதிய உச்சமாக மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது.
அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது. இந்த நிலையில், தற்போது தங்கங்தின் விலை சவரன் ரூ.60ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18ந்தேதி), 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,435 ரூபாய்க்கும்; சவரன் 59,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் (ஜனவரி 20ம் தேதி) திங்கள் கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 59,600 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (ஜன.,21) திங்கட்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதிரடியாக உயர்ந்து மக்களுக்கு பேரதிரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று (ஜன.,22) புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.7,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 20ந்தேதி பதவி ஏற்ற நிலையில், உலக நாடுகள் டிரம்பின் நடவடிக்கைளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்கத்தின் வலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது.