சென்னை; பிரதமர் நரேந்திர மோடி  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தவாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை அவரது கட்சியான பாஜகவினர் நாடு முழுவதும்  இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.