சென்னை: “கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே” என இன்று பிறந்தநாள் காணும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்த நாள். இன்று 68-வது பிறந்தநாள் காணும் அவருக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கமல்ஹாசனுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிட்டு டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

 தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என கூறியுள்ளார்.