சென்னை

சட்டசபையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.

இன்று சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.  இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில்,

“உலலொ; காலநிலை மாற்றம் தற்போதைய மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த 1969-ம் ஆண்டிலேயே காலநிலை மாற்றம் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் பேசி இருக்கிறார். அப்போது கலைஞரின் ஆட்சி, உழவர்கள் நலன் நாடும் ஆட்சியாக இருந்தது என எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருந்தார்.

எம் எஸ் சுவாமிநாதன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எம்.எஸ். சுவாமிநாதனின் அளப்பரிய பணிகளை நினைவு கூரும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தஞ்சை  ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும். மேலும்  இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்”.

என்று அறிவித்துள்ளார்.