ஆடை சர்ச்சை: மஞ்சள்தான் சிந்துவுக்கு பிடித்த கலரு!

Must read

பெங்களூரு : 
சிந்துவுக்கு பிடித்தமான மஞ்சள் கலர் ஆடையில் ஒலிம்பிக் இறுதி போட்டியில் ஆடியதால், இந்த விவகாரம் புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
1sindhu
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக கலந்து கொண்டவர்களில் இரண்டே இரண்டு பேர்தான் பதக்கத்தினை பெற்றனர். அதில் ஒருவர் சிந்து.
இந்தியா சார்பில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து,  தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி உள்ளார். விளம்பர நிறுவனம் கொடுத்த ஆடையை அணியாமல் தனக்கு பிடித்தமான மஞ்சள் நிற ஆடையுடன் விளையாடினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மும்பையிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்  மும்பை மிரர் என்ற  நாளிதழில் வந்துள்ள செய்தியில், பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது யோனக்ஸ் கம்பெனியின் ஆடையை சிந்து உடுத்தி இருந்தார். இந்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரபலமான போட்டிகளில் விளையாடுபவர்கள், அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் கம்பெனிகளின் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது விதிமுறை.  அதுபோல ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அணிய வேண்டிய உடைகளுக்கு, இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் லின் நிங் என்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம்  ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய வீரர்கள் தங்களது நிறுவன ஆடைகளை அணிவதற்காக,  இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் ரூ.3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை  மேற்கொண்டுள்ளது.
ஆனால்,  சிந்து மட்டுமின்றி பிற விளையாட்டு வீரர்களும் லி நிங் நிறுவனத்தின் ஆடையை அணியவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து லி நிங் நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தர் மகேந்திர கபூர் இந்திய ஒலிம்பிக் கழகத்திடம் புகார் செய்துள்ளார்.
ஆனால், லி நிங் நிறுவனம் வழங்கிய ஆடையின் நிறம் சிந்து உட்பட பல வீரர் வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதவிர, சிந்துவிற்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களே ராசி என்பதால் அவர் ஒலிம்பிக் போட்டியின் போது மஞ்சள் நிற உடையை அணிந்திருந்தார்.
தொடக்கத்தில் லி நிங் நிறுவன ஆடைகளை அணிந்தே சிந்து விளையாடி வந்ததாகவும், அடுத்தடுத்த போட்டிகளில்தான் அவர் அந்த ஆடையை தவிர்த்தார் என்றும் கூறப்படுகிறது.
இது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

More articles

Latest article