சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட துணிவகைகள் லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மலைபோல் குப்பையாக குவிந்துவருகிறது.

இதுகுறித்து கவலைதெரிவித்துள்ள அந்நாட்டு சுற்றுசூழல் ஆர்வலர்கள், ஒவ்வொரு ஆண்டும் 59,000 டன் துணி ரகங்கள் சிலி நாட்டிற்குள் கொண்டு வந்து குவிக்கப்படுவதாகவும்.

இதில், உள்ளூர் விற்பனை போக மீதி 39,000 டன் அளவு புதுப்புது ஆடைகள் குப்பை போல் வீணடிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

ஈகுயூ துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் இந்த ஆயத்த ஆடைகள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் விற்பனை போக மீதமுள்ள துணிகளை நகருக்கு வெளியே அட்டகமோ பாலைவனத்தில் கொண்டு குவிக்கப்படுகிறது.

பாலைவனத்தின் மணல் கூட தெரியாத அளவுக்கு மலைபோல் ஆடைபோர்த்தி இருப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்புகின்றனர்.

அதேவேளையில், இந்த துணிகளைக் கொண்டு ஒலி மற்றும் வெப்பத்தை தாங்கக்கூடிய இன்சுலேசஷன் பொருட்களாக மாற்றும் வேலையையும் வேறு சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.