டில்லி : பள்ளிப் பேருந்து ஓட்டுனரை சுட்டு மாணவனை கடத்திய கும்பல்

Must read

டில்லி

ன்றாம் வகுப்பு மாணவன் ஒருவர் பள்ளிப் பேருந்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளார்.

டில்லி மாநகரில் இன்று காலை ஒரு பள்ளிப் பேருந்து சுமார் 25 மாணவர்களுடன் சென்றுக் கொண்டு இருந்தது.    அந்தப் பேருந்து வடக்கு டில்லியின் தில்ஷத் கார்டன் பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தை நிறுத்தி உள்ளனர்.

நிறுத்தப்பட்ட பேருந்தில்  ஏறிய மர்ம நபர்கள் பேருந்து ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டனர்.    அந்த பேருந்தில் இருந்த ஒன்றாம் வகுப்பு மாணவர் விகான் குப்தா என்பவரை  கடத்திச் சென்றுள்ளனர்.    பேருந்தில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஓட்டுனரின் தற்போதைய நிலை பற்றி இன்னும் தகவல் ஏதும் வரவில்லை

More articles

Latest article