பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பாவ்னி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி , மதுமிதா, இசைவாணி என பிக் பாஸ் வீட்டை விட்டு ஏழு பேர் வெளியேறினர்.

இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு எண்ட்ரியாக வருகை தந்துள்ளார்.

முதல் ப்ரோமோவில், இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் அக்‌ஷரா, வருண், தாமரை, அபினய், இமான் மற்றும் ராஜு கொடுக்கப்பட்ட பஞ்சுகளை சேகரித்து, எடை போட வேண்டும். குறைவான பஞ்சுகளை சேகரித்தவர், தலைவராக தகுதியில்லாதவர் என, போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வருகிறது. இறுதியில் பிரியங்காவுக்கும் தாமரைக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இரண்டாவது ப்ரோமோவில், எனக்கு தகுதி இல்லை என எதற்காக கூறினீர்கள் என பிரியங்காவிடம், தாமரை கேட்கிறார். அதற்கு பிரியங்கா, வாய்ப்புகள் வந்தா தான் இந்த வீட்டில் உள்ள கசப்புகளை சரி செய்ய வேண்டுமா? அதனை சீக்கிரமாகவே சரி செய்துவிடு என்கிறார். இதனால் கடுப்பாகும் தாமரை, சம்பந்தம் இல்லாமல் பேசக்கூடாது, என்ன கசப்பு என நேரடியாக கூறுங்கள் என்கிறார். அதற்கு பிரியங்கா, தற்போது நீ இருக்கும் மன நிலைமையில் கேப்டன் ஆக உனக்கு தகுதி இல்லை என கூற, அதனை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என தாமரை பதிலுக்கு கூறும் காட்சிகள் உள்ளது. அப்போது அங்கிருக்கும் பாவனி எழுந்து செல்லும் காட்சிகள் உள்ளது.

மூன்றாவது ப்ரோமோவில், நாமினேஷன் நடைபெறும் காட்சிகள் உள்ளது. அதில் பாவ்னி, நிரூப், பிரியங்கா, அபினய் ஆகியோர் தாமரையை நாமினேட் செய்கின்றனர். மேலும் பிரியங்காவை, அக்‌ஷரா மற்றும் ராஜு நாமினேட் செய்கின்றனர். இதனை தொடர்ந்து தாமரை என்னை பார்த்து ஏ… பே என கத்தினாள் என பிரியங்கா கூறுகிறார். பின்னர் பாவ்னி மற்றும் பிரியங்காவை நாமினேட் செய்யும் தாமரை அழும் காட்சிகளும் உள்ளது.