ஆந்திரா:
மாநில அரசு குடிமை பிரிவுகளுக்கான நிதிகளை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நகராட்சி அல்லது நகராட்சி நிறுவனங்கள் மூலம் வரும் வருவாய் அனைத்தும் நகராட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று நகராட்சி மற்றும் நகராட்சி நிறுவனங்களுடன் கலந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார், அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:
மத்திய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்களின்படி, நகராட்சி மற்றும் நகராட்சி நிறுவனங்களுடைய வருவாய், நகராட்சி நிறுவனங்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும், அதன் வளர்ச்சிக்காகவும் நகராட்சியின் பல்வேறு திட்டங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வருமாறும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.